sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பேக்கரி ஊழியர்களை தாக்கும் வீடியோ வைரல்

/

 பேக்கரி ஊழியர்களை தாக்கும் வீடியோ வைரல்

 பேக்கரி ஊழியர்களை தாக்கும் வீடியோ வைரல்

 பேக்கரி ஊழியர்களை தாக்கும் வீடியோ வைரல்


ADDED : மார் 09, 2026 03:40 AM

Google News

ADDED : மார் 09, 2026 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பேக்கரியில் மர்ம நபர்கள் அத்துமீறி நுழைந்து ஊழியர்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கவுண்டன்பாளையம், வழுதாவூர் சாலை, தொழிலாளர் துறை அலுவலகம் எதிரே தனியார் பேக்கரி செயல்பட்டு வருகிறது.

இந்த பேக்கரிக்கு நேற்று மதியம் அதே பகுதியை சேர்ந்த சிலர், பேக்கரியில் வாங்கி சென்ற கேக் சரியில்லை எனக் கூறி தகராறில் ஈடுபட்டு, ஊழியர்களை தாக்கினர்.

இதைதொடர்ந்து, பேக்கரியில் அத்துமீறி நுழைந்து ஊழியர்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. தகவலறிந்த தன்வந்தரி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே, நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் சட்டம்- ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறி வருகிறார். ஆனால் முதல்வரின் வீட்டின் எதிரே இயங்கி வரும் பேக்கரியில் மர்மநபர்கள் அத்துமீறி நுழைந்து ஊழியர்களை தாக்குகின்றனர். இதை பார்க்கும் போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என எப்படி கூற முடியும் என, குற்றம் சாட்டினார்.






      Dinamalar
      Follow us