/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கபடி விளையாடிய தி.மு.க., எம்.எல்.ஏ., வீடியோ வைரல்
/
கபடி விளையாடிய தி.மு.க., எம்.எல்.ஏ., வீடியோ வைரல்
ADDED : ஏப் 23, 2025 04:03 AM

பாகூர்,: பாகூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில்குமார் கபடி விளையாடி, வீரர்களை உற்சாகப்படுத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பாகூர் தொகுதிக்குட்பட்ட சின்ன ஆராய்ச்சிக்குப்பம் கிராமத்தில் தேனீக்கள் விளையாட்டு கழகம் சார்பில் மூன்று நாட்கள் கபடி போட்டி நடைபெற்றது.
இப்போட்டியின், பரிசளிப்பு விழாவில் பங்கேற்க சென்ற பாகூர் தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் களத்தில் இறங்கி விளையாட்டு வீரர்களுடன் இணைந்து கபடி விளையாடினார். எதிர் அணியினரின் களத்திற்குள் ரெய்டு சென்ற அவர் கபடி கபடி என பாடிய படியே துள்ளி குதித்து ஒருவரை அவுட் செய்து விட்டு திரும்பினார். அங்கிருந்த வீரர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
செந்தில்குமார் எம்.எல்.ஏ., கபடி விளையாடி, வீரர்களை உற்சாகப்படுத்திய வீடியோ, சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.