தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாஜி அமைச்சர் கண்ணனுக்கு அரசு மரியாதை: விக்னேஷ் எம்.எல்.ஏ., கோரிக்கை

மாஜி அமைச்சர் கண்ணனுக்கு அரசு மரியாதை: விக்னேஷ் எம்.எல்.ஏ., கோரிக்கை

மாஜி அமைச்சர் கண்ணனுக்கு அரசு மரியாதை: விக்னேஷ் எம்.எல்.ஏ., கோரிக்கை


UPDATED : ஆக 18, 2026 07:28 PM

ADDED : ஆக 18, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2026 07:28 PM ADDED : ஆக 18, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முன்னாள் அமைச்சர் கண்ணின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை அரசு மரியாதையுடன் அனுசரிக்க வேண்டும் என, விக்னேஷ் கண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் முதல்வரிடம் அளித்துள்ள கடிதம்:

முன்னாள் அமைச்சர் கண்ணன் 1949ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி பிறந்தார், 2023 நவம்பர் 5ம் தேதி மறைந்தார். அவர், முன்னாள் உள்துறை அமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், சபாநாயகர், ராஜ்யசபா எம்.பி., உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.

புதுச்சேரி அரசின் நடைமுறைப்படி, சிலை மற்றும் நினைவிடம் இல்லாத முன்னாள் தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்கள் மேரி கட்டடத்தில், அரசு சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகின்றன. அதே நடைமுறையை பின் பற்றி, கண்ணின் பிறந்த நாள் மற்றும் மறைந்த நாள் ஆகிவற்றை மேரி கட்டடத்தில் அரசு சார்பில் அனுசரிக்க வேண்டும்.

மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியதுடன், மாநிலத்தின் வளர்ச்சிக்கா தனது நீண்டகால அரசியல் பயணத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் கண்ணன். அவரது பங்களிப்பை போற்றும் வகையில், அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை உரிய அரசு மரியாதையுடன் மேரி கட்டடத்தில் அனுசரிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us