/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ராஜ்பவன் தொகுதி மக்களுக்கு விக்னேஷ் கண்ணன் பரிசு வழங்கல்
/
ராஜ்பவன் தொகுதி மக்களுக்கு விக்னேஷ் கண்ணன் பரிசு வழங்கல்
ராஜ்பவன் தொகுதி மக்களுக்கு விக்னேஷ் கண்ணன் பரிசு வழங்கல்
ராஜ்பவன் தொகுதி மக்களுக்கு விக்னேஷ் கண்ணன் பரிசு வழங்கல்
ADDED : ஏப் 14, 2025 04:19 AM

புதுச்சேரி:ராஜ்பவன் தொகுதி மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் விக்னேஷ் கண்ணன், 2026ல் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராஜ்பவன் தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் விக்னேஷ் கண்ணன், நேரில் சென்று பரிசுத் தொகுப்பினை வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இவருடன், ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் முன்னாள் எம்.பி., கண்ணன் ஆதரவாளர்கள்,கடந்த மூன்று நாட்களாக புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பரிசு தொகுப்பினை வழங்கி வருகின்றனர்.
மேலும்,தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வரும் விக்னேஷ் கண்ணன், வரும் 2026ல் சட்டசபை தேர்தலில் தான் உறுதியாக போட்டியிடுவேன் என தெரிவித்து, மக்களின் ஆதரவினை திரட்டி வருகிறார்.
இதற்கிடையே,விக்னேஷ் கண்ணன் கடந்த 2 ஆண்டுகளாக ராஜ்பவன் தொகுதி மக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.