தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெண்கள் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு: விக்னேஷ் கண்ணன் வலியுறுத்தல்

பெண்கள் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு: விக்னேஷ் கண்ணன் வலியுறுத்தல்

பெண்கள் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு: விக்னேஷ் கண்ணன் வலியுறுத்தல்


UPDATED : ஆக 29, 2026 06:07 PM

ADDED : ஆக 29, 2026 06:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 29, 2026 06:07 PM ADDED : ஆக 29, 2026 06:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் விக்னேஷ் கண்ணன் எம்.எல்.ஏ., பேசியதாவது;

அரசு மருத்துவமனை கட்டடம் எப்போது இடிந்து விழுமோ என அனைவரும் அச்சத்தில் உள்ளனர். அரசு மருத்துவமனையின் மீது அக்கரை காட்ட வேண்டும். ராஜ்பவன் தொகுதியில் வைத்திக்குப்பம், குருசுக்குப்பம் பகுதிக்கு துாண்டில் வளைவு அமைத்து தரும் பணி நடைபெறுமா நடைபெறாதா?

அரசு மற்றும் தனியார் பெண்கள் பள்ளிகளின் வெளியே பாதுகாப்புக்கு பெண் காவலர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

மழைக்காலம் வரும் நிலையில், அனைத்து வாய்க்கால்களையும் உடனடியாக துார்வாரும் பணியை துவங்கிட வேண்டும். விழும் நிலையில் உள்ள மரங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்புறப்படுத்திட வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு சாதி சான்று பெறுவது கடினமாக உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பிளஸ் 1 சேரவும், பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லுாரி சேரவும் சாதி சான்று பெற, பெற்றோர்கள், மாணவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். அலைக்கழிப்பின்றி அந்த சான்றிதழ்களை விரைந்து வழங்கிட வேண்டும்.

ராஜ்பவன் தொகுதிகளில் நடேசன் நகர், ராமலிங்கம் நகர், பாப்பம்மாள் நகர் சாலைகளை சீரமைக்க வேண்டும். எல்.டி.சி., யு.டி.சி., தேர்வுகள் ஒருங்கிணைந்த முறையில் நடத்தப்படுவது சிரமமாக இருக்கிறது. இதனை முதல்வர் கருத்தில்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us