/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விக்னேஷ்சிவன் அரசு ஓட்டலை நேரடியாக கேட்கவில்லை: அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்

ADDED : டிச 17, 2024 07:01 AM

புதுச்சேரி: ''அரசின் சீகல்ஸ் ஓட்டலை சினிமா இயக்குனர் விக்னேஷ் சிவன் நேரடியாக விலை பேசவில்லை'' என சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.
அவர் நேற்று கூறியதாவது: அரசின் 'சீகல்ஸ்' ஓட்டலை சினிமா இயக்குனர் விக்னேஷ் சிவன் நேரடியாக விலை பேசவில்லை. அவருடன் வந்த உள்ளூர் நபர் தான் ஓட்டல் விற்பனைக்கு வருவதாக கூறினார். அவரை அப்போதே நான் கண்டித்தேன். அரசின் சொத்தை யார் நினைத்தாலும் விற்க முடியாது. அப்படி யாராவது கூறினால் நம்ப வேண்டாம்.
கலை நிகழ்ச்சி நடத்த இடம் பார்க்க வந்ததாக இயக்குனர் கூறினார். அதற்கு அரசின் இரண்டு கலையரங்குகள் இருப்பதை சுட்டிக் காட்டினேன். அரசு விதிக்கு உட்பட்டு வரிகளை செலுத்தி நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என தெரிவித்தேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.