/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இரவு முழுதும் விழித்திருந்த விஜய் ரசிகர்கள்
/
இரவு முழுதும் விழித்திருந்த விஜய் ரசிகர்கள்
ADDED : மார் 10, 2024 04:55 AM
புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது, நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிறுவனர் நடிகர் விஜய், சிறுமி படுகொலையை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.
அவர், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல நேற்று முன்தினம் நள்ளிரவு வருவதாக தகவல் பரவியது. இதனால், நள்ளிரவு முழுவதும் விஜய் ரசிகர்கள் கொட்ட கொட்ட விழித்திருந்தனர்.
விஜய் வந்துவிட்டால் என்னாவது என்று, போலீசாரும் நள்ளிரவு முழுவதும் விழித்து இருந்தனர். ஆனால், விஜய் வரவில்லை. இதனால், அங்கிருந்து ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். விஜய் ரசிகர்கள் கூறும்போது, 'அரியலுார் மாவட்டம், குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வால் டாக்டருக்கு படிக்க முடியாததால், கடந்த 2017ம் தற்கொலை செய்து கொண்டார். அப்போது நடிகர் விஜய் நள்ளிரவில் சிம்பிளாக வந்து அக்குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார்.
அதேபோன்று அவர் சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வருவார் என்பதால் காத்திருந்தோம். ஆனால் இது புரளியாகிவிட்டது' என்றனர்.

