/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விஜயகோபால சுவாமிகள் ஆராதனை புதுச்சேரியில் உஞ்சவ்ருத்தி நிகழ்ச்சி
/
விஜயகோபால சுவாமிகள் ஆராதனை புதுச்சேரியில் உஞ்சவ்ருத்தி நிகழ்ச்சி
விஜயகோபால சுவாமிகள் ஆராதனை புதுச்சேரியில் உஞ்சவ்ருத்தி நிகழ்ச்சி
விஜயகோபால சுவாமிகள் ஆராதனை புதுச்சேரியில் உஞ்சவ்ருத்தி நிகழ்ச்சி
ADDED : ஜன 18, 2024 04:01 AM
புதுச்சேரி: விஜயகோபால யதீந்த்ர சுவாமிகளின் ஆராதனையை முன்னிட்டு, புதுச்சேரியில் உஞ்சவ்ருத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், போலகத்தில் விஜயகோபால யதீந்த்ர சுவாமிகளின் மகோற்சவ விழா அடுத்த மாதம் 14ம் தேதி துவங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. இதை முன்னிட்டு, பாண்டுரங்க பஜன் சமாஜ் சார்பில், புதுச்சேரியில் உஞ்சவ்ருத்தி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் 20ம் தேதி காலை 8:00 மணிக்கு முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலிலும், 9:00 மணிக்கு அவ்வை நகர் ராஜகணபதி கோவிலிலும், 10:00 மணிக்கு குறிஞ்சி நகர் வலம்புரி விநாயகர் கோவிலும், 11:00 மணிக்கு செயின்ட் தெரேஸ் வீதியில் உள்ள ரங்க ராமானுஜர் பஜனை மடத்திலும் உஞ்சவ்ருத்தி நடக்கிறது.
இதன் நிறைவாக, மதியம் 12:00 மணிக்கு, லாஸ்பேட்டை, செல்லப்பெருமாள்பேட்டையில் உள்ள விவேகானந்தா பள்ளி வளாகத்தில் உஞ்சவ்ருத்தி நடக்கிறது. இதில் திரளாக பக்தர்கள் பங்கேற்று பொருள் உதவி செய்யுமாறு, பாண்டுரங்க பஜன் சமாஜ் நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.