/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விஜயகோபால யதி சுவாமிகள் மகோற்சவ உஞ்சவ்ருத்தி
/
விஜயகோபால யதி சுவாமிகள் மகோற்சவ உஞ்சவ்ருத்தி
ADDED : ஜன 25, 2025 05:34 AM
புதுச்சேரி : பாண்டுரங்க பஜன் சமாஜ் சார்பில், விஜயகோபால யதி சுவாமிகள் ஆராதனை மகோற்சவ உஞ்சவ்ருத்தி நாளை (26ம் தேதி) புதுச்சேரியில் நடக்கிறது.
அதையொட்டி, அன்று காலை 8:00 மணி முதல் 8:45 மணி வரை லாஸ்பேட்டை சிவ சுப்ரமணிய சுவாமி கோவில், காலை 9:00 மணி முதல் 9:45 மணி வரை குறிஞ்சி நகர் வலம்புரி விநாயகர் கோவில், காலை 10:00 மணி முதல் 10:45 மணி வரை செயின்ட் தெரேஸ் வீதி ராமானுஜர் பஜனை மடத்தில் உஞ்சவ்ருத்தி நடக்கிறது.
தொடர்ந்து, காலை 11:00 மணி முதல் 11:45 மணி வரை காந்தி வீதி, வேதபுரீஸ்வரர் கோவில், பகல் 12:00 மணி முதல் 12:45 மணி வரை எல்லைபிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் உஞ்சவ்ருத்தி நடக்கிறது. ஏற்பாடுகளை பாண்டுரங்க பஜன் சமாஜ் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.