/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிராம உதவியாளர் பணி விண்ணப்பம் வரவேற்பு
/
கிராம உதவியாளர் பணி விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மே 14, 2025 05:06 AM
புதுச்சேரி : கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
புதுச்சேரி வருவாய்துறை சிறப்பு செயலாளரும், மாவட்ட கலெக்டருமான குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
புதுச்சேரி அரசு வருவாய்த்துறையில் காலியாக உள்ள 54 கிராம உதவியாளர் மற்றும் 9 பல்நோக்கு ஊழியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு வரும் 15ம் தேதி காலை 10:00 மணி முதல் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 14.6.2025 மாலை 3:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.