/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் கொம்யூனில் கிராம சபை கூட்டம்
/
வில்லியனுார் கொம்யூனில் கிராம சபை கூட்டம்
ADDED : மே 02, 2025 04:49 AM

வில்லியனுார்: மே தினத்தை முன்னிட்டு வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் 24 பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் மே தினத்தை முன்னிட்டு, வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேதராப்பட்டு, தொண்டமாநத்தம், பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம், பொறையூர்-அகரம், குருமாம்பேட், வில்லியனுார், சுல்தான்பேட்டை, வி.மணவெளி, ஒதியம்பட்டு, கணுவாப்பேட்டை, கோட்டைமேடு, உறுவையாறு, திருக்காஞ்சி, மங்கலம், கீழ்சாத்தமங்கலம், சிவராந்தம், அரியூர் உள்ளிட்ட 24 கிராம பஞ்சாயத்துகளிலும் நேற்று காலை 10:00 மணி முதல் கிராம சபை கூட்டம் அந்தந்த பகுதி கிராம பஞ்சாயத்து அலுவலங்களில் நடந்தது.
கிராம சபை கூட்டங்களில் கொம்யூன் பஞ்சாயத்து, மின்துறை, பொதுப்பணித்துறை, போலீஸ், வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும் அந்தந்த பகுதி பொதுமக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வாளர்கள் திரளாக பங்கேற்று கிராம வளர்ச்சி திட்டத்திற்கான திட்டங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.

