/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் கொம்யூனில் நாளை கிராம சபா கூட்டம்
/
வில்லியனுார் கொம்யூனில் நாளை கிராம சபா கூட்டம்
ADDED : ஆக 13, 2025 11:48 PM
புதுச்சேரி : வில்லியனுார் கொம்யூனுக்கு உட்பட்ட 25 கிராம பஞ்சாயத்துகளில் நாளை (15ம் தேதி) கிராம சபா கூட்டம் நடக்கிறது.
வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 24 கிராம பஞ்சாயத்துக்களான சேதராப்பட்டு, தொண்டமாநத்தம், பிள்ளையார்குப்பம், கூடப்பாக்கம், பொறையூர், அகரம், வில்லியனூர் (மேற்கு), வில்லியனூர் ( மதத்தியம்) வில்லியனூர் (கிழக்கு) கோட்டைமேடு, சுல்தான்பேட்டை (தெற்கு) சுல்தான்பேட்டை (வடக்கு), குருமாம்பேட், மணவெளி (வடக்கு), மனவெளி (கிழக்கு) ஒதியம்பட்டு (கிழக்கு), ஒதியம்பட்டு (மேற்கு) கணுவார்பேட்டை, உருவையாறு, திருக்காஞ்சி மங்கலம், சாத்தமங்கலம், சிவரந்தகம், அரியூர், (தெற்கு) மற்றும் அரியூர் (வடக்கு) ஆகிய கிராமங்களில் காலை 10;00 மணி முதல் கிராம சபை கூட்டம் நடக்கிறது.
கூட்டத்தில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கிராமத்திற்கு தேவையான அடிப்படை தேவைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து தீர்மானங்களை இயற்றி, நடைமுறைப்படுத்த ஆவண செய்திட கலந்து கொண்டு மக்களின் குறைதீர்க்க தங்களின் மேலான பங்களிப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.