/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளிக்கு சுற்றுச் சுவர் கிராம மக்கள் கோரிக்கை
/
அரசு பள்ளிக்கு சுற்றுச் சுவர் கிராம மக்கள் கோரிக்கை
அரசு பள்ளிக்கு சுற்றுச் சுவர் கிராம மக்கள் கோரிக்கை
அரசு பள்ளிக்கு சுற்றுச் சுவர் கிராம மக்கள் கோரிக்கை
ADDED : அக் 22, 2025 02:12 AM

நெட்டப்பாக்கம்: பனையடிக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கவேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பனையடிக்குப்பம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில்பனையடிகுப்பம், வீராணம் சொரப்பூர், தோப்பு வீராணம் உட்பட பல பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில்,பள்ளியின் சுற்று சுவரானது இடிந்து விழுந்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாதசூழல் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் மதுபிரியர்கள்இடிந்த சுற்று சுவர் வழியாக உள்ளே சென்று, மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை அங்கேயே உடைத்து வீசி செல்கின்றனர்.
மேலும், சுற்று சுவர் இல்லாததால் பகல் நேரத்தில் பள்ளி வளாகத்தினுள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் புகுந்து மேய்கின்றன.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'பள்ளிக்கு சுற்று சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் குடிமகன்களால் இப்பகுதியில் குற்ற சம்பவங்கள் நடக்கிறது. சுகாதாரமற்ற குடிநீரைமாணவர்கள் குடிப்பதால் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. குடிநீர் பற்றாக்குறையும் உள்ளது' என்கின்றனர்.