ADDED : ஆக 25, 2026 09:23 PM
வில்லியனுார்: வில்லியனுாரில் காணாமல் போன பள்ளி மாணவர் சென்னையில் மீட்டனர்.
வில்லியனுார் ரவி. இவரது மகன் ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில் சரியாக படிக்கவில்லை என்பதால் தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவர் நேற்று முன்தினம் மாலை 7:00 மணியளவில் வீட்டியில் இருந்து வெளியே சென்ற மாணவர் மாயமானர்.
இது குறித்து ரவி கொடுத்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் மாணவர், வில்லியனுாரில் இருந்த பஸ் மூலம் விழுப்புரம் சென்று அங்கிருந்து ரயில் ஏறி சென்னைக்கு சென்றுள்ளார். எக்மோர் ரயில்வே நிலையத்தில் இருந்த மாணவரை ரயில்வே போலீசார் மீட்டு வில்லியனுார் போலீசாரக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் வில்லியனுார் போலீசார் நேற்று மாலை சென்னைக்கு சென்று மாணவரை மீட்டு வந்தனர்.
