ADDED : ஜன 15, 2026 07:54 AM

புதுச்சேரி: வில்லியனுார் தொகுதி தி.மு.க., சார்பில், திராவிட பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தென்கோபுர வீதியில் நடந்த விழாவிற்கு தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா தலைமை தாங்கி, விழாவை துவக்கி வைத்து, பெண்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கினார். தொகுதி செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.
பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், தொ.மு.ச., தலைவர் அங்காளன், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், ஆதிதிராவிடர் நலக்குழு செல்வநாதன், விவசாய அணி குலசேகரன், இலக்கிய அணி சீனு மோகன்தாசு, சிறுபான்மையினர் அணி முகம்மது ஹாலிது, அயலக அணி ஷாஜகான், அவைத் தலைவர் ஜலால் அனீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பளர்கள் தி.மு.க.,கொள்கை பரப்பு செயலாளர்கள் ஜெகத்ரட்சகன், சபாபதிமோகன் ஆகியோர் கோலப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கி, வாழ்த்தி பேசினர்.
விழாவில் வில்லியனுார் தொகுதியைச் சேர்ந்த 400 பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். அனைவருக்கும் உணவு, மா, கொய்யா, எலுமிச்சை, சப்போட்டா உள்ளிட்ட செடிகள் மற்றம் இயற்கை வேளாண் உணவுகள், கரும்பு வழங்கப்பட்டது.
தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, துணை அமைப்பாளர்கள் குமார்,தைரியநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குமரவேல், லோகையன், ஆறுமுகம், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
