கஞ்சா விற்ற 5 பேர் கைது வில்லியனுார் போலீசார் அதிரடி
கஞ்சா விற்ற 5 பேர் கைது வில்லியனுார் போலீசார் அதிரடி
ADDED : செப் 20, 2026 05:53 PM
வில்லியனுார்: ஆரியபாளையம் ஆற்றங்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர் அடுத்த ஆரியப்பாளையம் சங்காரபரணி ஆற்றங்கரை, அய்யனார் கோவில் பகுதியில் கஞ்சா விற்பதாக வில்லியனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டு தப்பிச்செல்ல முயன்ற ஐந்து பேரை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிராம் எடைகொண்ட 10 கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், கணுவாப்பேட்டையை புதுநகரை சேர்ந்த அப்பாஸ் மகன் நாசர், 25; வில்லியனுார், கணபதி நகர் பாலசுப்ரமணியன் மகன் லோகநாதன், 23; கீழ் அக்ரகாரம் ஜெயராமன் மகன் ஜெகதீஸ்வரன், 21; வடமங்கலம் செந்தில்குமார் மகன் பாலாஜி, 18; அரும்பார்த்தபுரம், புதுநகர் அருணகிரி மகன் சூர்யா, 22, ஆகியோர் என, தெரியவந்தது.
இவர்களுக்கு கஞ்சா பழக்கம் இருந்ததும், சென்னை அடையார் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜா என்பவரிடம் கஞ்சா வாங்கி வந்து வில்லியனுார் பகுதி இளைஞர்களுக்கு விற்பனை செய்ததும் தெரிந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து அவர்களிடம் இருந்து ஆறு மொபைல் போன்கள், விலை உயர்ந்த மூன்று பைக்குகள், ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.
