/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகர் சதுர்த்தி விழா : கலெக்டர் தலைமையில் ஆலோசனை
/
விநாயகர் சதுர்த்தி விழா : கலெக்டர் தலைமையில் ஆலோசனை
விநாயகர் சதுர்த்தி விழா : கலெக்டர் தலைமையில் ஆலோசனை
விநாயகர் சதுர்த்தி விழா : கலெக்டர் தலைமையில் ஆலோசனை
ADDED : ஆக 14, 2025 01:23 AM
புதுச்சேரி : விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு, வரும் 31ம் தேதி கடலில் கரைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இவ்விழாவிற்கான பாதுகாப்பு ஏற்படுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் போலீஸ், பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சி துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில்,போலீஸ் மற்றும் நகராட்சியினரிடம் அனுமதி பெற்று பொதுமக்களுக்கு பாதிப்பின்றி அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் விநாயகர் சிலையை வைக்க வேண்டும்.சிலைகளை கடலில் கரைக்க கொண்டு செல்லும் போது, அமைதியான முறையில் செல்ல வேண்டும்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும் அறிவுரைகளின்படி, கடலில் சிலைகளை கரைக்க வேண்டும்.
குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும். தாழ்வாக செல்லும் மின் ஒயர்கள், கேபிள்களை சரி செய்ய வேண்டும்.
கடல் நீர் மாசு ஏற்படாத வகையில் சிலைகளை கரைக்க வேண்டும். வாகனத்துடன் சேர்த்து விநாயகர் சிலை 19 அடிக்கு மேல் இருக்க கூடாது. 31ம் தேதி, சிலைகளை கடலில் கரைக்க ஊர்வலமாக செல்லும் சாலையில் மதுபான கடைகளை மூட வேண்டும்.
ஆம்புலன்ஸ், மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். விழா அமைதியான முறையில் நடைபெற அனைத்து துறை அதிகாரிகளுடன் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு கலெக்டர், ஆலோசனை வழங்கினார்.