ADDED : செப் 08, 2026 04:58 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, சீனியர் எஸ்.பி.கலைவாணன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், எஸ்.பி.,க்கள் ஜிந்தா கோதண்டராமன், சுருதி, வம்சிதர ரெட்டி, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், விழா குழு சார்பாக புதுச்சேரி இந்து முன்னணி மாநிலத் தலைவர் சனில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது அளிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தவிர்ப்பது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
