/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது
/
விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது
விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது
விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது
ADDED : அக் 29, 2024 06:14 AM

புதுச்சேரி: விநாயகா மிஷனின் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை, டீன், உதவி பேராசிரியருக்கு அமெரிக்கா லிஞ்ச்பர்க் பல்கலைக்கழகம் விருது வழங்கியுள்ளது.
அமெரிக்கா வர்ஜீனியா லிஞ்ச்பர்க் பல்கலைக்கழகம், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம் சமீபத்தில் கல்வியில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள், குறிப்பாக மருந்துவ உதவியாளர் பிரிவில் சிறந்த கல்வி நெறிமுறை கட்டமைப்புடன் கூடிய கல்வி நிறுவனங்களையும், அதில் சிறப்பாக பங்களிப்பாற்றும் கல்வியாளர்கள், பேராசிரியர்கள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் தேர்ர்ந்தெடுத்து விருது வழங்கி அங்கீகரித்துள்ளது.
இதில் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடைவீடு தொழிற்நுட்ப கல்லுாரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறந்த நிறுவனம் என்ற விருது வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுளது.
இவ்விருதானது உதவியாளர் பிரிவு பாடநெறிகள், மருத்துவ பயிற்சி மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கூடுதல் சான்றிதழ் படிப்புகள், வேலைவாய்புகளை ஏற்படுத்தி தருதல் ஆகியவைகளுக்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய அங்கீகாரம் கிடைக்க வழிகாட்டியாக செயல்பட்டு தனது பங்களிப்பை ஆற்றி வரும் துறை டீன் செந்தில்குமாருக்கு சிறந்த கல்வியியல் தலைவர் விருதும், மருத்துவ உதவியாளர் பிரிவு உதவி பேராசிரியர் சந்தோஷ்க்கு வளர்ந்து வரும் கல்வியாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது பெற்ற இருவரையும், பல்கலைக்கழக வேந்தர் கணேசன், துணை தலைவர் டாக்டர் அனுராதா கணேசன் ஆகியோர் வாழ்த்தினர்.