/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: முதல்வர் ரங்கசாமி திறப்பு
/
விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: முதல்வர் ரங்கசாமி திறப்பு
விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: முதல்வர் ரங்கசாமி திறப்பு
விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: முதல்வர் ரங்கசாமி திறப்பு
ADDED : ஏப் 17, 2025 06:44 AM

பாகூர் : புதுச்சேரி - கடலுார் சாலை, கிருமாம்பாக்கத்தில் விநாயகா மிஷன்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை, முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
விழாவில், விநாயகா மிஷன்ஸ் ரிசர்ச் பவுண்டேஷன் வேந்தர் கணேசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறந்து வைத்தார்.
அப்போது, அவர் பேசுகையில் 'உங்கள் ஆரோக்கியம், எங்களுடைய நோக்கம்' என்ற நல்ல எண்ணத்துடன் இங்கு மருத்துவமனையை நிறுவி, தற்போது, சிறப்பு வசதிகளுடன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை துவக்கி இருப்பது மிகழ்ச்சி அளிக்கிறது.
புதுச்சேரியை பொருத்தவரை மருத்துவ சுற்றுலா கிடைக்கக் கூடிய நிலையில், இங்கு மருத்துவ சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார்.வேந்தர் டாக்டர் ஏ.எஸ். கணேசன் பேசுகையில், இந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பல சிறப்பு மருத்துவ வசதிகளை உருவாக்கி உள்ளோம்.
நமது நாட்டில் மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்க ஒவ்வொரு மாநிலத்திலும், மிகப்பெரிய மையங்கள் உருவாக்க வேண்டும். என்னை பொருத்தவரையில், புதுச்சேரிக்கு இது சிறந்த வாய்பாக கருதுகிறேன்.
இங்கு, ஜிப்மர் உள்ளிட்ட 7 மருத்துவக் கல்லூரிகள் உள்ள நிலையில், விமான நிலைய விரிவாக்கம், ரயில், சாலை போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்பட்டால், இன்னும் 10 ஆண்டுகளில், புதுச்சேரி மருத்துவ சுற்றுலா மையமாக மாறிவிடும் என்றார்.
விழாவில், சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ., க்கள் லட்சுமிகாந்தன், செந்தில்குமார், விநாயகா மிஷன்ஸ் துணைத் தலைவர் அனுராதா கணேசன், முதன்மை வியூக அதிகாரி சுரேஷ் சாமுவேல், மருத்துவமனை இயக்குநர் ஹரி சிவதாஸ் மேனன், டீன்(நிர்வாகம்) ராஜன் மற்றும் மருத்துவ வல்லுனர்கள், கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இம்மருத்துவமனையில் இருதயவியல், நரம்பியல், சிறுநீரகவியல், இரைப்பை குடல் மருத்துவம், எலும்பியல் மற்றும் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை, குழந்தை மருத்துவம், பச்சிளம் குழந்தைகள் கண்காணிப்பு பிரிவு, புற்று நோய் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பிரிவுகள் மிகவும் அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களால் வழி நடத்தப்படுகிறது.