தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விதிமுறை மீறல் இ–செலானில் மாற்றம் கொண்டுவர எதிர்பார்ப்பு: தொடரும் குழப்பத்தால் வாகன ஓட்டிகள் ஆதங்கம்

விதிமுறை மீறல் இ–செலானில் மாற்றம் கொண்டுவர எதிர்பார்ப்பு: தொடரும் குழப்பத்தால் வாகன ஓட்டிகள் ஆதங்கம்

விதிமுறை மீறல் இ–செலானில் மாற்றம் கொண்டுவர எதிர்பார்ப்பு: தொடரும் குழப்பத்தால் வாகன ஓட்டிகள் ஆதங்கம்


UPDATED : அக் 12, 2026 09:11 PM

ADDED : அக் 12, 2026 07:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 09:11 PM ADDED : அக் 12, 2026 07:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான இ-–செலான் நடைமுறையில் புதிய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

புதுச்சேரியில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்காணிக்கவும், விபத்துகளைத் தடுத்து நிறுத்தவும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நகரின் முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் அதிநவீன கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு, 100 ரோடு நவீன மீன் மார்க்கெட் ஒருங்கிணைந்த மையத்திலிருந்து போக்குவரத்துப் போலீசார் தீவிரமாகத் கண்காணித்து வருகின்றனர். விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு இ-செலான் மூலம் அபராதம் விதிக்கப்படுவதும் நடைமுறையில் உள்ளது.

இந்த நவீன கண்காணிப்பு முறை பாராட்டுக்குரியநல்ல முயற்சி என்றாலும், இதன் நடைமுறையில் சில குறைபாடுகள் இருப்பது பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி பொதுமக்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு வரும் குறுஞ்செய்திகள் பல கேள்விகளை எழுப்புகின்றன.

அதில், ‘‘நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியுள்ளீர்கள்; உங்களுக்கு இவ்வளவு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்த வேண்டும்’’ என்ற பொதுவான வாசகங்களும், வாகனத்தின் பதிவெண்ணும் மட்டுமே இடம்பெறுகின்றன. எந்தவித விரிவான தகவல்களும் இன்றி வரும் இத்தகைய இசெலானை கண்டு வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சிக்கும் குழப்பத்திற்கும் ஆளாகின்றனர்.

சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதும், விபத்துகளைக் குறைப்பது சமூகத்தின் மிக முக்கியமான தேவைகளில் ஒன்று. அத்தியாவசியமானது கூட. அந்த வகையில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. தவறு செய்யும் போது தண்டனை பெறுவது அவசியம்தான். ஆனால், எந்தவித முன்னறிவிப்புத் தகவல்களுமின்றி தாமதமாக வரும் இந்த இசெலான் பல நடைமுறைச் சிக்கல்களை உருவாக்குகின்றன. குறிப்பாக எந்தத் தேதியில், எந்த நேரத்தில், எந்த இடத்தில் விதிமீறல் நிகழ்ந்தது என்ற விவரங்கள் இ-செலானில் இடம்பெறுவதில்லை. துல்லியமான விவரங்கள் இல்லாததால், எங்கு தவறு நடந்தது என்பதைத் தேடி கிழக்கு, மேற்கு, வடக்கு என காவல் நிலையங்களுக்கு அலைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

ஒரு வாகனத்தை வீட்டில் பலரும் பயன்படுத்துவது இயல்பு. நேரம் மற்றும் இடத்தை குறிப்பிட்டுக் காட்டினால் மட்டுமே, தவறு இழைத்தது யார் என்பதைத் தெரிந்துகொண்டு அவர்களைத் திருத்த முடியும். பொத்தாம் பொதுவாக வரும் இசெலானால் அவர்களை திருத்தவும் வாய்ப்பில்லாமல் போய்விடுகின்றது.

சட்டம் மற்றும் விதிமுறைகள் என்பது மக்களைத் தண்டிப்பதற்காக மட்டும் அல்ல; மாறாக, அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்துவதற்காகவே உருவாக்கப்படுகின்றன. வாகன ஓட்டிகள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து, எதிர்காலத்தில் அத்தவறைத் தவிர்க்க வேண்டுமெனில், இ-செலான்களில் நேரம், இடம், மற்றும் மீறப்பட்ட விதியின் விவரங்கள் முழுமையாக இடம்பெற வேண்டியது அவசியமாகும். விதிமுறை மீறலின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அனுப்பினால் தப்பில்லை.

இந்த விவகாரத்தில் போக்குவரத்துத்துறையும், போக்குவரத்துக் காவல்துறையும் இணைந்து உரிய தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்து, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய இ-செலான் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே புதுச்சேரி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

விழிப்புணர்வும் அவசியம்


இணையம் வழியாக சைபர் கிரைம் மோசடி கும்பல் இசெலான் அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு பயந்து பலரும் இசெலானை கிளிக் செய்வதில்லை. எனவே, இசெலானை உறுதிப்படுத்திக்கொண்டு அணுகுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us