/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விசுவாவசு வருட வாக்கிய பஞ்சாங்கம் வெளியீடு
/
விசுவாவசு வருட வாக்கிய பஞ்சாங்கம் வெளியீடு
ADDED : ஜன 27, 2025 04:54 AM

புதுச்சேரி : அகில இந்திய ஆதி சைவ சிவாச்சார்யார்கள் சேவா சங்கத்தின் விசுவாவசு வருட வாக்கிய பஞ்சாங்கம் முதல் பிரதியை கவர்னர் கைலாஷ்நாதன் வெளியிட்டார்.
அகில இந்திய ஆதி சைவ சிவாச்சார்யார்கள் சேவா சங்கம் சார்பில் தயாரித்த விசுவாவசு வருட வாக்கிய பஞ்சாங்கம் முதல் பிரதி கவர்னர் மாளிகையில் வெளியிடப்பட்டது.
கவர்னர் கைலாஷ்நாதன், சங்க நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பஞ்சாங்கத்தின் முதல் பிரதியை வெளியிட்டார்.
சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் ராஜா சுவாமிநாத சிவாச்சார்யார், புதுச்சேரி மாநில தலைவர் பாலசுப்ரமணிய சிவாச்சார்யார், துணை தலைவர் சிவராம சிவாச்சார்யார், கொள்கை பரப்பு செயலாளர் சேது சுப்ரமணிய சிவாச்சார்யார் ஆகியோர் வேத ஆசீர்வாத்துடன் பிரசாதம் வழங்கினர்.