/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தர் பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி துவக்கம்
/
விவேகானந்தர் பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி துவக்கம்
விவேகானந்தர் பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி துவக்கம்
விவேகானந்தர் பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி துவக்கம்
ADDED : ஜன 09, 2026 08:13 AM

புதுச்சேரி: பா.ஜ., சார்பாக விவேகானந்தரின் 163-வது பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி புதுச்சேரியில் நடக்கவுள்ளது.
அண்ணா திடலில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில், புதுச்சேரியை சேர்ந்த பல்வேறு கிரிக்கெட் அணியினர் கலந்து கொள்கின்றனர். அதனையொட்டி, நேற்று நடந்த துவக்க விழாவில், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் மற்றும் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் விவேகானந்தரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். மாநில இளைஞரணி தலைவர் ஆடலரசன் முன்னிலை வகித்தார்.
மாநில பா.ஜ., பொதுச் செயலாளர் மோகன்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், ஊடகத் துறை தலைவர் நாகேஸ்வரன், இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர்கள் அமல்ராஜ், விக்ரமன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.