/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தா மேனிலைப்பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
/
விவேகானந்தா மேனிலைப்பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
விவேகானந்தா மேனிலைப்பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
விவேகானந்தா மேனிலைப்பள்ளி 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 17, 2025 12:21 AM

புதுச்சேரி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் செல்லப்பெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 175 மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் கீர்த்திவாசன் 500க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் இடம் பிடித்தார். சிவஜோதி 492 மதிப்பெண்களுடன் 2ம் இடம், மதுமிதா , நித்யஸ்ரீ 491 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடம் பெற்றனர்.
பள்ளியில் 475 மதிப்பெண்களுக்கு மேல் 21 பேரும், 450க்கு மேல் 32 பேரும், 400க்கு மேல் 80 மாணவர்கள் மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். கணித பாடத்தில் 2 பேரும், அறிவியலில் 5, சமூக அறிவியலில் 5 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
90 மதிப்பெண்களுக்கு மேல் தமிழில் 52 பேரும், இந்தியில் 6 பேரும், ஆங்கிலத்தில் 111 பேரும், கணிதத்தில் 45 பேரும் அறிவியலில் 47 பேரும், சமூக அறிவியலில் 58 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
சாதனை மாணவ, மாணவிகளை விவேகானந்தா கல்வி குழுமத்தின் தாளாளர் செல்வகணபதி எம்.பி., முதன்மை முதல்வர் பத்மா, விவேகானந்த மேல்நிலைப்பள்ளி முதல்வர் கீதா ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.