/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தா பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் சாதனை
/
விவேகானந்தா பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் சாதனை
விவேகானந்தா பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் சாதனை
விவேகானந்தா பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் சாதனை
ADDED : மே 17, 2025 11:30 PM

புதுச்சேரி: ஐயன்குட்டிபாளையம் கோபாலன்கடை சாலை, விவேகானந்தா சி.பி.எஸ்.இ., பள்ளி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை படைத்துள்ளது.
௧௦ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 129 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவி ப்ரக்ரிதி 500க்கு 490 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். மாணவர் சண்முகவேலன் 486 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், மாணவர் கதிரவன் 484 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.
20 மாணவர்கள் 450க்கும் மேல் மதிப்பெண்ணும், 61 மாணவர்கள் 375க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில், தலா ஒரு மாணவர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இப்பள்ளியில், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 84 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். மாணவர் ராதேஸ்வரன் 475 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். மாணவர் கைலாஷ் 453 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி ஆதிரை பிரபு, மாணவர் துர்கேஷ் ஆகியோர் 449 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர்.
23 மாணவர்கள் 400க்கும் மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை, பள்ளி தாளாளர், செல்வகணபதி எம்.பி., பாராட்டினார். பள்ளி முதன்மை முதல்வர் பத்மா, முதல்வர் மேனகா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.