தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 'தினமலர் பட்டம்' வினாடி - வினா போட்டி

விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 'தினமலர் பட்டம்' வினாடி - வினா போட்டி

விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 'தினமலர் பட்டம்' வினாடி - வினா போட்டி


ADDED : நவ 09, 2024 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2024 06:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : லாஸ்பேட்டை விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில், 'தினமலர் பட்டம்' வினாடி வினா போட்டி நேற்று நடந்தது.

புதுச்சேரி 'தினமலர் பட்டம்' இதழ் மற்றும் ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் பரிசு வெல்' மெகா வினாடி வினா போட்டியின், பள்ளி அளவிலான போட்டி, லாஸ்பேட்டை விவேகானந்தா வித்யாலயா (சி.பி.எஸ்.இ.) பள்ளியில் நேற்று நடந்தது.

பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா தலைமை தாங்கினார். வினாடி வினா போட்டியில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் 300 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முதல்நிலை தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வாகினர். 8 அணிகளாக பிரித்து இறுதி போட்டி நடந்தது. 8ம் வகுப்பு மாணவர்கள் ரோகன், சுபிசரண் முதலிடம் பிடித்தனர். 7ம் வகுப்பு மாணவிகள் ரித்திகா, சன்விகா 2ம் இடம் பிடித்தனர்.

வெற்றி பெற்ற இரு அணிகளுக்கும் பதக்கம் மற்றும் பரிசுகளை பள்ளி முதல்வர் மீனாட்சி வழங்கி பாராட்டினார். பள்ளி அளவில் வெற்றி பெற்ற இரு அணிகளும், மெகா வினாடி வினா போட்டியில் பங்கேற்க தேர்வாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us