/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சமுதாயக் கல்லுாரியில் விவேகானந்தர் பிறந்த நாள்
/
சமுதாயக் கல்லுாரியில் விவேகானந்தர் பிறந்த நாள்
ADDED : ஜன 29, 2026 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லுாரியில், தமிழ் துறை சார்பில், விவேகானந்தரின் 163வது பிறந்த தினம் இளைஞர் நாளாக கொண்டாடப்பட்டது.
கல்லுாரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பேராசிரியர் மாலதி வரவேற்றார். நிகழ்ச்சியில் போக்குவரத்து எஸ்.பி., ரட்சனா சிங், ஆம்புலன்ஸ் மணி, சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வாழ்த்தி பேசினார்.
பேராசிரியர் அரங்க முருகையன் நன்றி கூறினார். இதில், மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப் பட்டது.
கல்லுாரியின் பல்வேறு துறை பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

