/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கைப்பந்து போட்டி பரிசளிப்பு விழா
/
கைப்பந்து போட்டி பரிசளிப்பு விழா
ADDED : ஜூலை 17, 2025 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஆண்டியார்பாளையம் பிரபு பிரதர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 4ம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது.
இப்போட்டியில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த 28 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் ஆண்டியார்பாளையம் பிரபு பிரதர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், கூனிச்சம்பட்டு பீனிக்ஸ் அணியும் மோதின.
இதில், கூனிச்சம்பட்டு அணி வெற்றி பெற்று முதலிடத்தையும், ஆண்டியார்பாளையம் அணி 2ம் இடத்தையும் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு திருபுவனை வட்டார காங்., பொதுச் செயலாளர் வேலு பரிசுகள் வழங்கினர். கிளப் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.