தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்


ADDED : ஜன 10, 2024 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2024 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : திருக்கனுார் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் முட்டையுடன் மதிய உணவு சாப்பிட்ட 15க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி, மண்ணாடிப்பட்டு தொகுதி, மணலிப்பட்டு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, மணலிப்பட்டு மற்றும் அதனை சுற்றிலுள்ள தமிழக பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

பள்ளியில் நேற்று முட்டையுடன் கூடிய மதிய உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உணவு சாப்பிட்ட மாணவர்களில் 15 பேருக்கு திடீரென வயிற்று வலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். மாணவர்களுக்கு பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை. சிகிச்சை பின் ஆசிரியர்கள், மாணவர்களை அழைத்து வந்து, பள்ளிக்கு பெற்றோரை வரவழைத்து வீட்டிற்கு அனுப்பினர்.

இதேபோல், திருக்கனுார், மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு அரசு பள்ளிகளில் மதிய உணவு சாப்பிட மாணவர்கள் சிலரும், வாந்தி ஏற்பட்டு, சிகிச்சை பெற்று திரும்பினர்.

இதுகுறித்து தகவலறிந்த கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us