கதிர்காமம் சுயேச்சை வேட்பாளர் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு
கதிர்காமம் சுயேச்சை வேட்பாளர் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 03, 2026 11:03 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: கதிர்காமம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் அழகானந்தம் தந்தை பெரியார் நகரில் ஓட்டு சேகரித்தார்.
கதிர்காமம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் அழகானந்தம் தந்தை பெரியார் நகரில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். முன்னதாக ரத்தினம் நகர், சாரதாம்பாள் நகரில் குக்கர் சின்னத்தில் ஓட்டு சேகரித்த அவர், நான் சுயேட்சையாக போட்டியிட்டாலும் தொகுதி முழுவதும் உங்களைப் போன்று மக்கள் ஆதரவு நிறைய இருக்கிறது.
மக்கள் ஆதரவோடு அதிக ஓட்டு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற நீங்கள் குக்கர் சின்னத்தில் ஓட்டு போட வேண்டும். நான் வெற்றி பெற்றதும், இப்பகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையம் கொண்டு வந்து சேர்ப்பேன்' என்றார்.
ஓட்டு சேகரிப்பின் போது, பல பகுதிகளில் தானாக முன்வந்து வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
