/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் 'தர்பூசணி'க்கு ஓட்டு சேகரிப்பு
/
ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் 'தர்பூசணி'க்கு ஓட்டு சேகரிப்பு
ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் 'தர்பூசணி'க்கு ஓட்டு சேகரிப்பு
ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் 'தர்பூசணி'க்கு ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 03, 2026 05:32 AM

வில்லியனுார்: நெல்லித்தோப்பு தொகுதியில் ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் வீடு வீடாக சென்று தர்பூசணி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார்.
நேற்று, சவரிராயலு படையாட்சி வீதி மற்றும் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகளிடம் லட்சிய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் ஓட்டு சேகரித்ததார். சாலையோர கடைகள் மற்றும் வியாபாரிகள் வேட்பாளரிடம் தாங்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் குறைகள் தெரிவித்தனர்.
அதனை கேட்டுக்கொண்ட வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், தங்கள் குறைகள் அனைத்தும்உடனடி சரிசெய்வதாக உறுதியளித்தார்.
அப்பகுதியில் கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து தீவிரமாக ஓட்டு சேகரித்தார். அப்போது வேட்பாளர் ஜெயக்குமாருக்கு பெண்கள் மலர் துாவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.ஓட்டு சேகரிப்பின் போது லட்சிய ஜன நாயக கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்.,- பா.ஜ., - அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.