/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டு திருட்டு விழிப்புணர்வு கூட்டம்
/
ஓட்டு திருட்டு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : நவ 17, 2025 02:51 AM

திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு தொகுதி காங்., சார்பில், ஓட்டு திருட்டு தொடர்பான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் மற்றும் கையெழு த்து இயக்கம் திருக்கனுார் கடை வீதியில் நடந்தது.
மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், கார்த்திகேயன் ஓட்டு திருட்டை கண்டித்து பேசினர்.
வட்டார தலைவர் பரமசிவம், தொகுதி பொறுப்பாளர் தனுசு, மாநில பொதுச் செயலாளர்கள் சுரேஷ், முத்துரங்கம், மாநில செயலாளர் ரகுபதி, ராஜிவ் பஞ்சாயத்து அமைப்பு தேசிய ஒருங்கிணைப்பாளர் இனாமுல் ஹசன் மற்றும் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் ஓட்டு திருட்டு தொடர்பான கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தனர்.

