காங்., வேட்பாளர் ஷாஜகான் கை சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு
காங்., வேட்பாளர் ஷாஜகான் கை சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 08, 2026 03:25 PM

புதுச்சேரி: காலப்பட்டு தொகுதி காங்., வேட்பாளர் ஷாஜகான் தொகுதி முழுதும் கை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வருகிறார்.
இவருக்கு மக்கள் அலைகடலென திரண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். காலப்பட்டு தொகுதி முழுதும் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்த வேட்பாளர் ஷாஜகான் பேசுகையில், 'காங்., தலைவர்கள் சோனியா, ராகுல் பெண்களுக்காக நிறைய திட்டங்கள் செய்திருப்பது அனைவருக்கும் தெரியும். இப்பகுதியில் அமைதி நிலவ கை சின்னத்திற்கு ஓட்டு போட்டு என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
காங்., ஆட்சிக்கு வந்தால், புதிய தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரப்படும். அதுவரை வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க ரூ.2,500 மதிப்பிலான மளிகை பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும். இத்திட்டங்கள் அனைத்தும் புதுச்சேரியில் கிடைத்திட காங்., கட்சிக்கு ஓட்டு போட வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.
