கதிர்காமத்தில் சுயேச்சை வேட்பாளர் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு
கதிர்காமத்தில் சுயேச்சை வேட்பாளர் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 01, 2026 07:52 PM

புதுச்சேரி: கதிர்காமம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் அழகானந்தம் வீடு, வீடாக சென்று குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
நேற்று காலை கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட பாரதி வீதி, கதிர்காமம் மாரியம்மன் கோவில் வீதி, வழுதாவூர் ரோடு ஆகிய பகுதிகளிலும், மாலை தட்சணாமூர்த்தி நகர், ராமலிங்கம் நகர், செல்வா நகர், செல்வா நகர் விரிவு பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவரிடம், அப்பகுதி பொதுமக்கள் தங்களது பிரச்னையை எடுத்துக் கூறி வருகின்றனர். தான் சேவை செய்வதற்காக அரசியல் போட்டியிடுவதாகவும், என்னை அதிகப்படியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும். நான் எம்.எல்.ஏ., ஆனால் பொது மக்களின் அனைத்து தேவைகளையும் உடனுக்குடன் என்னால் நிறைவேற்ற முடியும், என்றார்.
பின்னர் வழுதாவூர் சாலையில் உள்ள வணிக நிறுவனங்களில் உள்ள வியாபாரிகள், தொழிலதிபர்களை சந்தித்து குக்கர் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
