/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சட்டசபையை முற்றுகையிட முயன்ற வவுச்சர் ஊழியர்களால் பரபரப்பு
/
சட்டசபையை முற்றுகையிட முயன்ற வவுச்சர் ஊழியர்களால் பரபரப்பு
சட்டசபையை முற்றுகையிட முயன்ற வவுச்சர் ஊழியர்களால் பரபரப்பு
சட்டசபையை முற்றுகையிட முயன்ற வவுச்சர் ஊழியர்களால் பரபரப்பு
ADDED : ஜன 13, 2026 06:49 AM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட முயன்ற வவுச்சர் ஊழியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி பொதுப்பணித் துறையில் 1300 வவுச்சர் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ரூ.18,000 தொகுப்பூதியம் மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு பணிகளில் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களை நிரந்தரம் செய்வதாக சட்டசபையில் முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை வவுச்சர் ஊழியர்கள் மூலம் நிரப்ப வேண்டும்.
வவுச்சர் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அரசு பணியாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் வவுச்சர் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி சட்டசபையை முற்றுகையிட நேற்று முயன்றனர். அவர் களை போலீசார் அரசு மருத்துவமனை அருகே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஊழியர்கள் அங்கேயே தரையில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர்.
வவுச்சர் ஊழியர்கள் போராட்டம் காரணமாக சட்டசபைக்கு செல்லும் வழிகள் அனைத்தையும் போலீசார் பேரிகார்டு அமைத்து மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

