sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வவுச்சர் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: கவர்னர் ஒப்புதல் கவர்னர் ஒப்புதல்

/

வவுச்சர் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: கவர்னர் ஒப்புதல் கவர்னர் ஒப்புதல்

வவுச்சர் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: கவர்னர் ஒப்புதல் கவர்னர் ஒப்புதல்

வவுச்சர் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: கவர்னர் ஒப்புதல் கவர்னர் ஒப்புதல்


ADDED : அக் 30, 2024 04:25 AM

Google News

ADDED : அக் 30, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி,: வவுச்சர் ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்க கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பொதுப்பணித்துறையில் வவுச்சர் ஊழியர்கள் 1,378 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கோரி கடந்த 10 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர்.

அதனையொட்டி, கடந்தாண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில், வவுச்சர் ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதற்கான அரசாணை வெளியிடாததால், வவுச்சர் ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், வவுச்சர் ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அதன்படி செப்டம்பர் மாதம் ஊதிய உயர்வு அளிக்காததால், கடந்த ஒரு வாரமாக வவுச்சர் ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து முதல்வர் உத்தரவின் பேரில், வவுச்சர் ஊழியர்களின் மாத சம்பளம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி நிதித்துறை அனுப்பிய கோப்பிற்று கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார். இதனால், வவுச்சர் ஊழியர்கள் 1,378 பேருக்கு வரும் நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்பட்ட ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us