/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மசாஜ், உல்லாசத்திற்கு பெண் வேண்டுமா: ஆன்லைனில் சபலிஸ்ட்டுகளிடம் மோசடி பொள்ளாச்சி கும்பல் கைது
/
மசாஜ், உல்லாசத்திற்கு பெண் வேண்டுமா: ஆன்லைனில் சபலிஸ்ட்டுகளிடம் மோசடி பொள்ளாச்சி கும்பல் கைது
மசாஜ், உல்லாசத்திற்கு பெண் வேண்டுமா: ஆன்லைனில் சபலிஸ்ட்டுகளிடம் மோசடி பொள்ளாச்சி கும்பல் கைது
மசாஜ், உல்லாசத்திற்கு பெண் வேண்டுமா: ஆன்லைனில் சபலிஸ்ட்டுகளிடம் மோசடி பொள்ளாச்சி கும்பல் கைது
ADDED : அக் 29, 2024 06:10 AM

புதுச்சேரி: ஆன்லைன் மூலம் மசாஜ்,உல்லாசம் என விளம்பரம் வெளியிட்டு, சபலிஸ்ட்டுகளிடம் பல ஆயிரம் மோசடி செய்த பொள்ளாச்சி கும்பலைச் சேர்ந்த 5 பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம், மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் பிரவீன். உல்லாசமாக இருக்க லோகாண்டோ என்ற மொபைல் அப்ளிகேஷனில் பெண்களை தேடினார். அப்போது, ஹைபை மாடல் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 6000, இரவு முழுதும் இருக்க ரூ. 15,000, இதர பெண்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ. 3000 என வாசகத்துடன், மொபைல் எண் குறிப்பிட்டு விளம்பரம் வந்தது.
அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, மர்ம நபர் உல்லாசமாக இருக்க பெண் அனுப்புவதாக கூறியதுடன், வாட்ஸ் ஆப் மூலம் பல பெண்களின் படங்களை அனுப்பி வைத்தார். முதலில் ரூ. 500 முன்பணமாக பிரவீன் அனுப்பினார். அதன் பின், சில பெண்கள் படத்தை தேர்வு செய்து அனுப்பினார். அதற்கு வாடகை கார், ஓட்டல் அறை வாடகை என மொத்தம் ரூ. 30 ஆயிரம் என கூறி ஜிபே மூலம் அனுப்பினார்.
ஆனால் ஓட்டல் அறைக்கு சென்றபோது, அந்த அறையில் வேறு நபர்கள் தங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைசியில் பிரவீனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து பிரவீன், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
சீனியர் எஸ்.பி., கலைவாணன் உத்தரவின்பேரில், எஸ்.பி., பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார், பணம் அனுப்பட்ட வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண்ணை கொண்டு விசாரணை நடத்தினர். அதில், இந்த மோசடியில் ஈடுபட்ட 15 பேர் கொண்ட கும்பல் பொள்ளாச்சியில் உல்லாச விடுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அந்த கும்பலை, தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு 2:00 மணிக்கு சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களில், புதுச்சேரி வழக்கில் தொடர்புடைய பொள்ளாச்சி ஹரிபிரசாத், 32; அருண்குமார், 29; சங்கர், 29; ஹர்ஷவரதன், 23; மதுரை விஷ்ணுபரத், 32; ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள், மோசடிக்கு பயன்படுத்திய 19 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் 5 பேரையும் நேற்று புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
எஸ்.பி., பாஸ்கரன் கூறிய தாவது:
லொகண்டோ, எஸ்கார்ட் சர்வீஸ் அமைப்பு உலக அளவில் பயன்பாட்டில் உள்ளது. வெளிநாடுகளில் இச்சேவை ஏமாற்றாமல் கொடுக்கின்றனர். வளர்ந்து வரும் நாடுகளில் சிலர் தாங்களே இதில் பதிவு செய்து, சபலிஸ்ட்டுகளை தொடர்பு கொண்டு, பெண் வேண்டுமா, மசாஜ் செய்யலாமா என கேட்கின்றனர்.
மர்ம நபர்களின் வலையில் விழும் சபலிஸ்ட்டு களிடம், இளம் அழகிகள் இருப்பதாகவும், தனிப்பட்ட விடுதிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கி றோம், முன் பணமாக ரூ.10 ஆயிரம் டிபாசிட் செலுத்த வேண்டும்.
பெண் திரும்ப வந்ததும், மீதி தொகை திருப்பி தருவதாக கூறி ஏமாற்றி வந்துள்ளனர். புதுச்சேரியில் மட்டும் கடந்த 10 மாதங்களில் 22 புகார்கள் வந்தள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு இதுபோன்ற வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் மேலும் 8 பேர் தேடி வருகிறோம்.
குழுவின் தலைவராக ஹரிபிரசாத் செயல்பட்டு வந்துள்ளார். இந்த மோசடி கும்பல், புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா கேரளா, கர்நாடகா மாநிலத்திலும் மோசடியில் ஈடுபட்டுள்ளது. மதுபான கடைக்கு மதுபானம் அருந்த வரும் நபர்களிடம் ரூ. 100 அல்லது ரூ. 200 கொடுத்து அவர்களின் பெயரில் சிம்கார்டு பெற்று அதன் மூலம் மோசடி செய்து வந்துள்ளனர். கும்பலின் ஒருவரது வங்கி கணக்கில் மட்டும் 2 மாதத்தில் ரூ. 7.18 லட்சம் பணம் வந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 3000க்கும் மேற்பட்ட நபர்கள் மோசடியில் சிக்கி பணம் இழந்துள்ளனர்.
இதுபோன்ற பணத்தை இழந்த இளைஞர்கள், பொதுமக்கள் புகார் கொடுக்க முன்வராதது, இந்த மோசடி கும்பலுக்கு பெரிய பாதுகாப்பு அரணாக இருக்கிறது.
எனவே, இணைய வழியில் வரும் எதையும் நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். பெண்கள் சர்வீஸ் என்ற பெயரில் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்றார்.