தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போர்க்கொடி அமைச்சர் திடீர் டில்லி பயணம்

போர்க்கொடி அமைச்சர் திடீர் டில்லி பயணம்

போர்க்கொடி அமைச்சர் திடீர் டில்லி பயணம்


ADDED : நவ 26, 2024 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இலாகா பறிப்பை கண்டித்து போர்க்கெடி உயர்த்தியுள்ள அமைச்சர் நேற்று அவசரமாக டில்லி புறப்பட்டு சென்றது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பா.ஜ., அமைச்சர் சாய் சரவணன்குமார் வசம் இருந்த குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் திருமுருகனுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் அடிப்படை சேவை துறை முதல்வர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அதில், அதிருப்தியடைந்த சாய்சரவணன்குமார், கூடுதல் இலாகா பெற்றுத் தர வேண்டி, கவர்னரிடம் வலியுறுத்தினார்.

இதுகுறித்து, மேலும், நான் என்ன தவறு செய்தேன், அமைச்சரவையில் தனக்கு கடைசி இடம் தானா என நேற்று முன்தினம் கேள்வி எழுப்பினார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர் சாய் சரவணன் குமார் நேற்று மதியம் அவசரமாக டில்லி புறப்பட்டு சென்றார். இதுகுறித்து அரசியல் வட்டாரத்தில் விசாரித்தபோது, கட்சி தலைமை அழைப்பின் பேரில் டில்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அமைச்சர் சாய்சரவணன்குமார் அவசரமாக டில்லி புறப்பட்டு சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us