தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிச்சைக்காரர் கொலையா? போலீசார் விசாரணை

 பிச்சைக்காரர் கொலையா? போலீசார் விசாரணை

 பிச்சைக்காரர் கொலையா? போலீசார் விசாரணை


ADDED : பிப் 04, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 05:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் அருகே பிச்சை எடுத்துவந்தவர் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு சங்கராபரணி ஆற்றங்கரை பகுதியில் காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் பகுதியில் பிச்சைக்காரர்கள் இரவு நேரத்தில் படுத்துக்கொள்வது வழக்கம். நேற்று காலை கோவில் முன்பக்க கோபுர வாசல் ஒட்டிய பகுதியில் சுமார் 50 வயது மதிக்கதக்க பிச்சைகாரர் ஒருவர், தலையில் காயங்களுடன் ரத்தம் உறைந்த நிலையில் இறந்துகிடப்பதாக வில்லியனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற மேற்கு பகுதி எஸ்.பி சுப்ரமணியன், வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் இறந்துகிடந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்ககாமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, அந்த பகுதியில் சம்பவத்திற்கான தடையங்களை சேகரித்து, சந்தேக மரணம் பிரிவில் வழக்குப் பதிந்து , இறந்தவர் கொலைசெய்யப்பட்டாரா, மேலும் இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us