/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீணடிக்கப்படும் போலீஸ் நிதி 'பயன்படாத தார் ஜீப்'
/
வீணடிக்கப்படும் போலீஸ் நிதி 'பயன்படாத தார் ஜீப்'
ADDED : செப் 23, 2024 05:01 AM

புதுச்சேரி, : புதுச்சேரி போலீசுக்கு சமீபத்தில் ரூ. 2.5 கோடி மதிப்பில் 2 மகேந்திரா தார் ஜீப், 9 பொலிரோ கார், 4 ராயல் என்பில்ட் புல்லட், அப்பாச்சி பைக் 10, ஹீரோ ஸ்பிலண்டர் 115, ஸ்கூட்டர் 4 வாங்கப்பட்டது. போலீஸ் பயன்பாட்டிற்கு கடந்த காலத்தில் ஜீப் வாங்கப்பட்டது. அதிகாரிகள் பயன்பாட்டிற்கு மட்டும் இன்னாவோ, ஸ்கார்ப்பியோ சொகுசு வாகனங்கள் வாங்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர்கள் சட்டம் ஒழுங்கு போலீசார் விரைந்து செல்ல அதிக அளவில் பொலிரோ கார் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் வாங்கப்பட்ட வாகனங்களில் தலா ரூ. 25 லட்சம் மதிப்புள்ள 2 தார் ஜீப்புகள் வாங்கப்பட்டது.
இதில் 4 பேர் பயணிக்க இருக்கை இருந்தாலும், 2 பேர் மட்டுமே சொகுசாக செல்ல முடியும். முன் இருக்கை மடித்த பிறகே பின்னால் அமர்ந்திருப்பவர் வெளியே வர முடியும். இது போலீஸ் பயன்பாட்டிற்கு சரியாக இருக்குமா என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த சூழ்நிலையில், புதிதாக வாங்கி 2 தார் ஜீப்புகளில் ஒன்று 'எஸ்கார்டு' பணிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. மற்றொரு எம்.டி.எஸ்., யூனிட்டில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதுபோன்று போலீஸ் துறை நிதியை வீணடிக்காமல், போலீஸ் பயன்பாட்டிற்கு தேவையான வாகனங்கள் வாங்க வேண்டும் என்கின்றனர் போலீசார்.