/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரெயின்போ நகரில் வீணாகும் மழைநீர்
/
ரெயின்போ நகரில் வீணாகும் மழைநீர்
ADDED : நவ 10, 2024 04:42 AM

புதுச்சேரி ரெயின்போ நகரில் அப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தடி நீர், உப்பு நீராக மாறிவிட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் குடிநீருக்கு கேன் தண்ணீரை வாங்கி வருகின்றனர்.
ஆனால், ஆண்டுதோறும் மழைக் காலத்தில் இப்பகுதியில் மழை நீர் குளமாக சூழ்ந்து நிற்பதும், அதனால், அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் அவல நிலை தொடர்கதையாக உள்ளது.
இப்பிரச்னைக்கு ஆட்சியாளர்கள் நிரந்தர தீர்வை ஏற்படுத்தாமல், உழவர்கரை நகராட்சி மூலம் தற்காலிக தீர்வாக ரெயின்போ நகரில் சூழும் மழைநீரை இரண்டு ராட்சித மோட்டார்களை கொண்டு 45 அடி சாலையில் உள்ள வாய்க்கால்களில் வெளியேற்றி வருகின்றனர்.
மழைக்காலங்களில் இப்பகுதியில் சூழும் மழை நீரை சேமிக்காத்தால், நிலத்தடி நீர் மட்டமும் உயரும். நிலத்தடி நீரின் உவர் தன்மையும் மாற வாய்ப்புள்ளது.
இதற்கு, ரெயின்போ நகரில் உள்ள அரசு மற்றும் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் மழைநீர் சேமிப்பு குளங்கள் ஏற்படுத்தலாம். மேலும், வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், செல்லான் நகர், 45 அடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் வீடுகளில் மழைநீர் சேகரிப்புக்கு தொட்டிகள் அமைக்காலம்
இவ்வாறு செய்தால் இயற்கை நன்கொடையாக தரும் பல்லாயிரம் லிட்டர் மழை நீர் வாய்க்காலுக்கு செல்லாமல் தடுக்கலாம். இதற்கு ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.