/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
படுகை அணையை சீரமைக்காததால் தண்ணீர் விரயம்; விவசாயிகள் வேதனை
/
படுகை அணையை சீரமைக்காததால் தண்ணீர் விரயம்; விவசாயிகள் வேதனை
படுகை அணையை சீரமைக்காததால் தண்ணீர் விரயம்; விவசாயிகள் வேதனை
படுகை அணையை சீரமைக்காததால் தண்ணீர் விரயம்; விவசாயிகள் வேதனை
ADDED : டிச 06, 2024 05:58 AM

திருக்கனுார் : சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும், சேதமடைந்த செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் படுகை அணையை சீரமைக்காததால், தண்ணீர் தேங்க வழியின்றி வீணாக வெளியேறியது.
புதுச்சேரி, செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட படுகை அணையின் மூலம் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் குடிநீர் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
பொதுப்பணித்துறை அதிகாரிகளின் போதிய பராமரிப்பு இல்லாததால், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி சேதமடைந்த படுகையணை முற்றிலும் உடைந்தது. இந்நிலையில், தற்போதைய புயல் கனமழை காரணமாக வீடூர் அணை திறக்கப்பட்டு, சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக ஆற்றின் குறுக்கே இருந்த மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கைக்கிலப்பட்டு தடுப்பணைகள் நிரம்பியது. ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்து உடைந்த செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் படுகையணை இதுவரையில் சீரமைக்கப்படாததால், புதிய படுகையணையும் அமைக்காததால், மழைநீர் தேங்க வழியின்றி வீணாக கடலுக்கு சென்றது.
இதனால் இப்பகுதி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். எனவே, அடுத்த ஆண்டிற்குள் புதிய படுகை அணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.