/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிநீர் குழாய் புதைக்கும் பணி
/
குடிநீர் குழாய் புதைக்கும் பணி
ADDED : நவ 17, 2025 02:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம் கிராமத்தில் குடிநீர் குழாய் புதைக்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
பொதுப்பணித் துறை சார்பில், நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட வடுக்குப்பம் கிராமத்தில் ரூ. 44.15 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதற்கான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் 2 சுந்தரமூர்த்தி, பொது சுகாதார கோட்டசெயற்பொறியாளர்கள் வாசு, பீனா ராணி உட்பட பலர் பங்கேற்றனர்.

