/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அரசு பள்ளிக்கு வழங்கல்
/
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அரசு பள்ளிக்கு வழங்கல்
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அரசு பள்ளிக்கு வழங்கல்
குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அரசு பள்ளிக்கு வழங்கல்
ADDED : ஆக 14, 2025 11:50 PM
புதுச்சேரி: ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி ஆரோசிட்டி சார்பில், புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி துணை முதல்வர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். பள்ளி பொறுப்பாசிரியர் பத்மாவதி முன்னிலை வகித்தார். விழாவிற்கு ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி ஆரோசிட்டியின் தலைவர் பாக்யராஜ், துணைத் தலைவர்கள் பாரதி, சிவராமச்சந்திரன், பொருளாளர் செல்வகுமார், நிர்வாக செயலாளார்கள் ஹர்ஷத் கான், பாலு, முன்னாள் தலைவர் தமிழ்ச்செல்வி, செயற்குழு உறுப்பினர் ஜோஷ்வா ஆகியோர் பள்ளி வளாகத்தில் ஒரு மணி நேரத்தில் 50 லிட்டர்குடிநீரை சுத்திகரித்துக்கொடுக்கக்கூடிய இயந்தி ரத்தை பள்ளிக்கு வழங்கினர். இதன் மூலம் பள்ளியில் படிக்கும் 520 மாணவர்கள் பயனடைவர். ஆங்கில விரிவுரையாளர் கீதப்ரியா நன்றி கூறினார்.