/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையை உடைத்து குடிநீர் இணைப்பு: வழக்கு பதிவு
/
சாலையை உடைத்து குடிநீர் இணைப்பு: வழக்கு பதிவு
ADDED : ஜூன் 14, 2025 07:02 AM
பாகூர் :உரிய அனுமதி பெறாமல், சாலையை உடைத்து, குடிநீர் இணைப்பு பெற்றவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
பிள்ளையார்குப்பம் - பாகூர் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை சார்பில் புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அந்த சாலையில் சார்காசிமேடு அங்கன்வாடி மையம் அருகே, அனுமதி பெறாமல் ஒருவர், சாலையை உடைத்து குடிநீர் இணைப்பை பெற்றார்.
சாலையை உடைத்து சேதமாக்கியது தொடர்பாக, பொதுப்பணித்துறைக்கு கட்டடம் மற்றும் சாலை பராமரிப்பு தெற்கு கோட்ட உதவி பொறியாளர் பன்னீர் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், ஏட்டு திருமுருகேசன், சாலையை சேதப்படுத்திய சார்காசிமேடு கிராமத்தை சேர்ந்த பக்கிரி என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.