/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பூமியான்பேட்டையில் நாளை குடிநீர் 'கட்'
/
பூமியான்பேட்டையில் நாளை குடிநீர் 'கட்'
ADDED : அக் 15, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பூமியான்பேட்டை பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
பொதுப்பணித்துறை பொது சுகாதாரக்கோட்ட செயற்பொறியாளர் செய்திகுறிப்பு:
பூமியான்பேட்டையில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை சுத்தம் செய்யும் பணிகள் மெற்கொள்ளப்படுகிறது. இதனால் நாளை (16ம் தேதி) மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை பூமியான்பேட்டை, விக்டோரியா நகர், ஜவகர் நகர், பாவாணர் நகர், ஜான்சி நகர், பொன் நகர், சுதாகர் நகர், கல்யாணசுந்தரமூர்த்தி நகர், அன்னை நகர், சரநாராயணன் நகர், காவேரி நகர், செல்லம் பாப்பு நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.