/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒட்டம்பாளையத்தில் நாளை குடிநீர் 'கட்'
/
ஒட்டம்பாளையத்தில் நாளை குடிநீர் 'கட்'
ADDED : ஜன 22, 2025 08:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஒட்டம்பாளையத்தில் நாளை மதியம் குடிநீர் வினியோகம் தடைபடும் என, பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிவிப்பு:
புதுச்சேரி, ஒட்டம்பாளையம், கொம்பாக்கம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் நாளை 23ம் தேதி மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை, கொம்பாக்கம், கொம்பாக்கம் பேட், பாப்பாஞ்சாவடி, ஒட்டம்பாளையம், காமராஜர் நகர், சிமெண்ட் களம், குப்பம் பேட் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் தடைபடும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.