/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனகோடி நகர்,தர்மபுரி, குருமாம்பேட்டில் நாளை குடிநீர் 'கட்'
/
தனகோடி நகர்,தர்மபுரி, குருமாம்பேட்டில் நாளை குடிநீர் 'கட்'
தனகோடி நகர்,தர்மபுரி, குருமாம்பேட்டில் நாளை குடிநீர் 'கட்'
தனகோடி நகர்,தர்மபுரி, குருமாம்பேட்டில் நாளை குடிநீர் 'கட்'
ADDED : நவ 28, 2025 04:46 AM
புதுச்சேரி: தனகோடி நகர், தர்மாபுரி, குருமாம்பேட் பகுதிகளில், நாளை மற்றும் 1ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
தனகோடி நகர் மற்றும் தர்மாபுரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நாளை 29ம் தேதியும், குருமாம்பேட் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் வரும் 1ம் தேதியும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
இதனால், நாளை தனகோடி நகர், தர்மாபரி, லெனின் வீதி, சபரி நகர், புரட்சித்தலைவி நகர் பகுதிகளிலும், வரும் 1ம் தேதி குருமாம்பேட் ஹவுசிங் போர்டு காலனி, அய்யங்குட்டிப்பாளையம், ராகவேந்திரா நகர், சிவசக்தி நகர், சுபாஷ் சந்திர போஸ் நகர் பகுதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை குடிநீர் விநியோகம் தடைபடும்.
இதனை பொதுப்பணித்துறை பொதுசுகாதார கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.