/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தியால்பேட்டை பகுதியில் 26ம் தேதி குடிநீர் 'கட்'
/
முத்தியால்பேட்டை பகுதியில் 26ம் தேதி குடிநீர் 'கட்'
முத்தியால்பேட்டை பகுதியில் 26ம் தேதி குடிநீர் 'கட்'
முத்தியால்பேட்டை பகுதியில் 26ம் தேதி குடிநீர் 'கட்'
ADDED : டிச 24, 2024 05:38 AM
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, குருசுக்குப்பம் பகுதியில் வரும் 26ம் தேதி குடிநீர் விநியோகம் தடைபடும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொதுப்பணித் துறை பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் உமாபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி குடிநீர் உட்கோட்டம் வடக்கு பிரிவுக்குட்பட்ட காட்டாமணிக்குப்பம் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே வரும் 26ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையில் முத்தியால்பேட்டை, சோலை நகர், கணேஷ் நகர், அங்காளம்மன் நகர், மஞ்சினி நகர், வ.உ.சி., நகர், வைத்திக்குப்பம், குருசுக்குப்பம், மாணிக்க முதலியார் தோட்டம், தெபேசன்பேட், விஸ்வநாதன் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.