/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீர்வழி போக்குவரத்து ஆணைய தலைவர் முதல்வர் ரங்கசாமியுடன் சந்திப்பு
/
நீர்வழி போக்குவரத்து ஆணைய தலைவர் முதல்வர் ரங்கசாமியுடன் சந்திப்பு
நீர்வழி போக்குவரத்து ஆணைய தலைவர் முதல்வர் ரங்கசாமியுடன் சந்திப்பு
நீர்வழி போக்குவரத்து ஆணைய தலைவர் முதல்வர் ரங்கசாமியுடன் சந்திப்பு
ADDED : ஜூலை 25, 2025 02:35 AM

புதுச்சேரி: புதுச்சேரிக்கு வருகை புரிந்த, இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்கு வரத்து ஆணைய தலைவர் விஜயக்குமார், முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் விஜய்குமார். இவர், மத்திய அரசின் தொழிற்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் இணக்க சுமை குறைப்பு அமைப்பின் சிறப்புக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
புதுச்சேரி வந்துள்ள இவர் நேற்று ஓட்டல் அக்கார்டில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு, கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் இணக்க சுமை குறைப்பு குறித்து அனைத்துத் துறைச் செயலர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
பின், சட்டசபைக்கு சென்று முதல்வர் ரங்கசாமியை, மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். சந்திப்பின் போது, தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசுச் செயலர் (தொழில்துறை) விக்ராந்த் ராஜா, கலெக்டர் குலோத்துங்கன் ஆகியோர் உடனிருந்தனர்.